India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணி புரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். ,மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி சரோஜ்குமார் தாகூர் இன்று (ஆகஸ்ட் 3) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்றப்பட்ட காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
கலவை தாலுகா சென்னசமுத்திரம் மோட்டூர் ரேஷன் கடையில் திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக் இன்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் தரமான அரிசி, பருப்பு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா என்று சேல்ஸ்மேனிடம் கேட்டறிந்தார். மேலும் தரமற்ற பொருட்கள் வந்தால் அப்படியே லாரியில் திருப்பி அனுப்பி விடவும் என்றும் அவர் தெரிவித்தார். ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர் சாந்தா உடன் இருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த லோகநாயகி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராணிப்பேட்டையில் புதிய ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக ஜெயசுதா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ராணிப்பேட்டையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள ரத்தனகிரி என்னும் மலையில் அமைந்துள்ளது ரத்தினகிரி முருகன் கோவில். இந்த கோவில் 14-நூற்றாண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்டது. குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்றால் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம் உள்ளது. இந்த கோவில் மலையின் மேல் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது பல இயற்கை காட்சிகளை காணமுடியும்.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி மலைக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மலைக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை 22 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோயில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதில் நிராகரிக்கப்படும் மனுக்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் முறையான விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய பதில் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பி.சி, எம்.பி.சி மற்றும் டி.என்.டி சமூகத்தை சேர்ந்தவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க அரசு நிதி வழங்குகிறது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு , மாவட்ட சிறுபாண்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறைசார் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறைசார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியில் வரும் மழைநீர் மண் கலந்து கலங்களாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணையின் பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் குடிநீரினை பொதுமக்கள் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் ஆரவைத்து குடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.