India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. 12-19 வயது வரையுள்ள பள்ளி மாணவர்கள், 17-25 வயதுடைய கல்லூரி மாணவர்கள், 15-35 வரையுள்ள பொதுப்பிரிவினர் , அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அடுத்த மோசூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, நெமிலி வி.எஸ்.பி திருமண மண்டபம், கூடலூர் ஆதிலட்சுமி திருமண மண்டபம், பன்னியூர் கூட்ரோடு, கஸ்தூரி சதாசிவம் திருமண மண்டபம், கணியனூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அனந்தலை ஊராட்சி சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா?, தண்ணீர் வசதி கழிவறை மற்றும் சத்தான உணவு சமைத்து பரிமாறப்படுகிறதா? ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் என்று ஆட்சியர் மாணவிகளிடம் கேட்டுக் கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அரக்கோணம் , ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அரக்கோணம் அரசு ஐடிஐயில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 1 முதல் 16ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நேரடி சேர்க்கை குறித்த விவரங்களுக்கு 9499055679 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்ற கோணத்தில் சோளிங்கர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
சோளிங்கர் நகராட்சியில் 30க்கும் மேற்பட்ட கடை மற்றும் வீட்டு வரி செலுத்தாதவர்களுக்கும், தொழில் உரிமம் பெறாதவர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் தலைமையில் நோட்டீஸ் வழங்கி, வரி கட்டாதவர்கள், உரிமம் பெறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று எச்சரிக்கை செய்தார். மேலும் குறித்த நாட்களுக்குள் வரி செலுத்தாவிடில் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இன்று, சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தியை, கைத்தறி துறை இயக்குநர் அ.சண்முகசுந்தரம் (இ.ஆ.ப), நேரில் சந்தித்து வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற உள்ள தேசிய கைத்தறி தின விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வி.ஏ.ஓ விநாயகமூர்த்தி ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர் . மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவருக்கும் கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
Sorry, no posts matched your criteria.