India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனப்பாக்கத்தில், ‘டாடா மோட்டார்ஸ்’ அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்.28ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். ‘சிப்காட்’ தொழில் பூங்காவில் ஆலை அமைக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, 470 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’ கார்களை, டாடா மோட்டார்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துணி நூல் துறை சார்பில் ஜவுளித்துறை முனைவோர்களுடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. துணிநூல் துறை துணை இயக்குனர் அம்சவேணி,உதவி இயக்குனர் தேவி பத்மஜா,மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (23.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கவர்ந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
கண்ட்ரோல் ரூம் : 9884098100
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தையொட்டி காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலங்களுக்கு சென்று தங்களது கோரிக்கைகளை சைகை மொழியில் தெரிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் துறைசார்ந்த அரசு அலுவலர்களுக்கு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகிலுள்ள சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இன்று வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தேவராணி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் பகுதியில் வாலாஜா மேற்கு ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், திமுக வெற்றி பெற்றாலும் கூட பல தொகுதிகளில் கட்சி முறையாக வளரவில்லை.வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் SI மற்றும் 2ஆம் நிலை காவலர் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் செப்.30க்குள் https://forms.gle/U6jezR4ErRVZ1t1x8 இந்த Link ல் Google form ஐ பூர்த்தி செய்து அனுப்புமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த மோசூர், அரக்கோணம் டவுன், விண்டர்பேட்டை ஆகிய 3 துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இன்று (செப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரக்கோணம், மோசூர், கீழ்பாக்கம், நகரிக்குப்பம், ஆணைப்பாக்கம் , அம்பரிஷிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாளை 23 /9/ 2024 அன்று விவசாயிகளுக்கான உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயண பயிற்சிக்காக 50 க்கு மேற்பட்ட விவசாயிகளை திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்திற்கு விவசாயிகளை அழைத்துச் செல்கிறார்கள். இதில் ஆர்வம் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அரக்கோணம் வேளாண்மை உதவி இயக்குனர் அனுராதா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.