India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட செய்தியில் ஆன்லைனில் விழிப்புடன் இருங்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்களைக் கவனியுங்கள் என்றும், உங்கள் கணக்குகளுக்கு வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பராமரிக்கவும் எனவும், கூடுதல் பாதுகாப்பிற்காக செயலில் இரு காரணி அங்கீகாரம் பயன்படுத்துமாறும், உங்கள் சாதனங்களையும் மென்பொருளையும் தவறாமல் புதுப்பிக்கவும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 21ஆம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார். யூஸ் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

தமிழ் திரையுலகத்தின் காமெடி நடிகர் கூல் சுரேஷ் புதிய திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்ட நிலையில், இன்று ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக் கோயிலுக்கு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் இவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

மாம்பாக்கம் கிராமம் கலங்கள் ஓடை தெருவை சேர்ந்தவர் தேவா (24). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் கதவின் வழியாக பார்த்தபோது தேவா தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 15 ஆயிரத்து 147 மாணவ மாணவிகளும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 13,912 பேரும், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை 13 ஆயிரத்து 837 மாணவ மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான அனைத்து துறை சார்ந்த அலுவலர் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக திருத்தணி கோ.அரி மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆகியோரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( பிப்ரவரி 17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொடர்பு எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (40) என்பவர் இன்று அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோயில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி வழுக்கி குளத்தில் விழுந்ததில், மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Sorry, no posts matched your criteria.