Ranipet

News August 17, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 17, 2024

ஹாக்கி விளையாடிய அமைச்சர் ஆர். காந்தி

image

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ராணிப்பேட்டை பொறியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 37 மாவட்டங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சப் ஜூனியருக்கான போட்டியினை தொடங்கி வைத்தார். இதையடுத்து விளையாட்டு வீரர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.

News August 17, 2024

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

தமிழ்நாடு அரசு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அதிக அளவில் மாணவ மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். இந்த போட்டியில் 53 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர்

image

ராணிப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தை இன்று மாலை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். அப்போது உணவகத்தில் தரமான உணவு பரிமாறப்படுகிறதா என்று அமைச்சர் கேட்டறிந்தார்.

News August 16, 2024

ராணிப்பேட்டையில் விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாட்கோ மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் 3 வருட முழுநேர பட்டப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் தாட்கோ இணையதளத்தில் வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 16, 2024

ராணிப்பேட்டையில் 42 மாதங்களில் 3042 பேர் கருக்கலைப்பு

image

ராணிப்பேட்டையில் கடந்த 42 மாதங்களில் 3,042 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.

News August 16, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட உழவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1 கிலோ 42 ரூபாய். தக்காளி ரூபாய் 28 முதல் ரூபாய் 24 வரையிலும் கத்திரிக்காய் ரூபாய் 35 முதல் ரூபாய் 30 வரையிலும் சிறிய வெங்காயம் ரூ.76 ரூபாய் முதல் ரூ.60 வரையிலும் பெரிய வெங்காயம் ரூ.50 வரையிலும் இஞ்சி ரூ. 160 முதல் ரூ.170 ரூபாய் வரை கேரட் ரூ. 70 வரையிலும் பூண்டு ரூ.260 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 16, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

ராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா, ஒழுங்கூர் துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார்நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர் பஜார், தலங்கை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News August 16, 2024

ராணிப்பேட்டையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

image

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில், 58 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 330 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும் வழங்கினார். மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 500 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

News August 15, 2024

ராணிப்பேட்டை நகராட்சிக்கு 3வது இடம்

image

தமிழ்நாட்டில் சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருது ராணிப்பேட்டை நகராட்சிக்கு 3வது இடம் கிடைத்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தியை ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் இன்று நேரில் சந்தித்து முதல்வர் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

error: Content is protected !!