Ranipet

News February 21, 2025

30 வழித்தடத்தில் மினி பேருந்துகள் – ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: 30 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினி பேருந்துக்கான எஸ்சிபிஏ விண்ணப்ப படிவத்தினை பாரிவாகன் மூலமாக விண்ணப்பித்து உரிய இணைப்புகளுடன் பிப்ரவரி 21 முதல் 31ம் தேதிக்குள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கவனம் பெற்ற போஸ்டர்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொது இடங்கள், மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு அமைப்பு, இயக்கம், கட்சிகளில் பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாடு வரைப்படத்தை கருப்பில் வரைந்து அதன் முன்பு ஊரின் பெயர் பலகையில் தமிழ் வாழ்க என்றும், அதன் கீழ் இந்தியில் கருப்பு மையிட்டு அழித்தவாறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

News February 21, 2025

ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 21, 2025

பொருள் இல்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,48,406 குடும்ப அட்டைதாரர்கள் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில் www.tnpds.gov.in வலைத்தளத்தில் பதிவு செய்து பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நடககும் முகாமில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News February 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News February 21, 2025

அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் முன்னேற்றங்கள் குறித்தும் காலதாமதங்கள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 20, 2025

மாணவியர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

image

ராணிப்பேட்டை காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, கோட்டாட்சியர் ராஜராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அறிவுடையநம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News February 20, 2025

மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு ஆய்வு செய்த ஆட்சியர்

image

வாலாஜா நகராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடியது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காலை உணவு திட்டத்தில் நிறை குறைகளை அவர் கேட்டறிந்தார்.

News February 20, 2025

நகராட்சி பூங்காவை ஆட்சியர் சந்திரகலா ஆய்வு

image

வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பூங்காவை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா வட்டாட்சியர் அருள் செல்வம் நகராட்சி ஆணையாளர் இளையராணி, பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!