India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பாவேந்தன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் கட்சியை சீமான் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக பாவேந்தன் குற்றச்சாட்டி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சீமான் இன்று செல்லும் நிலையில் பாவேந்தன் கட்சியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த முட்புதர்கள் மற்றும் காய்ந்த இலைகள் மள மளவென தீ பற்றி எரிந்தது இது குறித்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் முகுந்தராயபுரம் ஊராட்சி அக்ராவாரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 27.80 லட்சம் மதிப்பீட்டிலான கடன் உதவியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன்,அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. அவற்றை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம்: 9884098100

ஆற்காடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தோப்பு கருப்பசாமி கோயிலின் 4ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சாமிக்கு படையல் போடப்பட்டது. இதில் 21 ஆடு, 50 கோழி, ஆயிரம் முட்டை கருப்புக்கு படைக்கப்பட்டது. முடிவில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவை கருப்பசாமி கோயில் அறங்காவலர் ஏற்பாடு செய்திருந்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் பிப்ரவரி 26ம் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை வனத்துறை பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1க்குள் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

அரக்கோணம் அடுத்த சின்ன மோசூர் கிராமத்தில் வனத்துறை சார்பில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் 2.5 ஏக்கர் மதிப்பில் மரகத பூஞ்சோலை திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா வட்டாட்சியர் ஸ்ரீதேவி விஏஓ ராஜேஷ் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.