India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்ட சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி அம்மாள். பேரன் தேவாவுடன் சொத்து தகராறில் இருந்த நிலையில், இன்று, ஆத்திரத்தில் தேவா காசி அம்மாளை கல்லால் தாக்கி கொலை செய்தார். தகவல் அறிந்த திமிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பேரன் தேவாவை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
வாலாஜாவை அடுத்த கத்தாரி குப்பம் கிராம பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (70). இவர் அம்மூர் ரோடு தென்றல் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது பற்றி மேலும் விசாரணை நடைபெறுகிறது.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த லிங்கை <
அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கோடை விடுமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகே உள்ள குளம் குட்டை ஆறுகள் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று காவேரிப்பாக்கத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது நாடாளுமன்ற தொகுதி வரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் செய்யும். தமிழக நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இப்போது உள்ள தொகுதிகளை குறைக்க எவ்விதத்திலும் சம்மதிக்க மாட்டோம் எனக் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர்
ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் அபிஷேக் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று அரக்கோணத்தில் காமராஜர் நகர் மோசூர் ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்
வினோத் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மார்ச் 28ஆம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. எட்டாம் வகுப்பு முதல் ஐடிஐ, நர்சிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான `அருள்மிகு மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.