Ranipet

News February 26, 2025

ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

image

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே இன்று மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

News February 26, 2025

ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று (பிப்ரவரி -26)வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: சாலையில் சாகசம் செய்வது பெரும் விபத்துக்கு வழி வகுக்கும். மித வேகத்தில் செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். சாலை பாதுகாப்பு, நம் உயிர் பாதுகாப்பு என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News February 26, 2025

பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

image

நங்கமங்கலம் கிராமம் எம்.ஜிஆர் நகரில் பழைய பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2025

துணை சுகாதார நிலையத்தில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு

image

தகரக் குப்பத்தில் புதிதாக துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இந்த சுகாதார நிலையத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் நேற்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தார். இதுகுறித்து செவிலியர் ஒருவர் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, ஜன்னல் கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

News February 26, 2025

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் மூன்று நபர்கள் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அஸ்வின், வழிப்பறி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யஸ்வந்த், சந்தோஷ் ஆகியோர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் நேற்று (25.02.2025) அடைக்கப்பட்டார்கள்.

News February 26, 2025

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்

image

ஐபேடு தனியார் தொழிற்சாலை அருகில் நேற்று இரவு இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் கோவிந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் அவரது ஒன்பது வயது மகன் கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2025

மின் வயர் அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு

image

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவருக்கு சொந்தமான பசுமாடு அங்குள்ள காலி இடத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இது தெரியாமல் பசுமாடு அந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தது. இது குறித்து கால்நடை மற்றும் வருவாய் துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

News February 25, 2025

திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

ராணிப்பேட்டை நகரத்தில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்து மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் கலந்து கொண்டனர்.

News February 25, 2025

ராணிப்பேட்டை காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: கடவுச்சொல்லுக்கான கேள்விகளை உருவாக்கும் போது பதில்கள் சைபர் மோசடி காரர்களால் யூகிக்க முடியாத வண்ணம் உருவாக்கவும். இதன் மூலம் தங்களை சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்கலாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News February 25, 2025

ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு: 22 பேர் மீது வழக்கு பதிவு

image

மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று நேற்று திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!