Ranipet

News October 8, 2024

ராணிப்பேட்டை சுற்றுப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் சுற்றுப்பகுதிகளில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், நன்பகலுக்கு பின்னர், கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, கலவை, திமிரி, ஆற்காடு, புதுப்பாடி, திருப்பாற்கடல், பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், சுமைதாங்கி, வாலாஜா, வீசி மோட்டூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு சில இடங்களில் தூறல் மழை பெய்தது.

News October 8, 2024

66 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்புக்…

image

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 704 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 66384 மாணவ, மாணவிகளுக்கும், தேவையான பாடப்புத்தகங்கள் நோட்டுகள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கியதாக மாவட்ட கல்வி துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 8, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24*7 நாள் முழுவதும் இயக்கக்கூடிய 1077 மற்றும் 04172-271766 ஆகிய எண்களுடன் மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.மேலும் புயல் மற்றும் மழை நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் whatsapp மூலமாக 8300929401 என்ற எண்ணிற்கு உடனுக்குடன் அனுப்பிவிட வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

ராணிப்பேட்டையில் மூன்று ஆர்ஐக்கள் மாற்றம்

image

ஆற்காடு தாலுகா திமிரி வருவாய் ஆய்வாளர் வடிவேலு சோளிங்கர் தாலுகா பானாவரத்துக்கும், பானாவரத்தில் பணியாற்றி வந்த யுவராணி அரக்கோணம் வடக்கு வருவாய் ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுரேஷ் திமிரி வருவாய் ஆய்வாளராகவும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News October 7, 2024

ஆதிதிராவிட நபர்கள் புகார்களை பதிவு செய்யலாம்

image

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 145666 தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் புகார்களை பதிவு செய்யலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (7.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

News October 7, 2024

அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

image

40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான ஸ்டாலின் திமுக அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி “உயர்த்தப்பட்ட சொத்து வரியை” உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் (08.10.2024) நாளை காலை 9.30 மணிக்கு மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் எஸ்எம் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி குறிப்பில் “அதிக விலை மதிப்புடைய பொருள் குறைந்த விலைக்கு தருவதாக சொல்லி உங்களை கூரியர் அல்லது தபால் நிலையத்தில் பணம் கட்ட சொல்லி அந்த பொருளை வாங்க வைத்து பின் அந்த பெட்டியை திறந்தால் உங்களிடம் கூறிய பொருள் அதில் இருப்பதில்லை” இது போன்ற குறைந்த விலைக்கு பொருட்கள் என வரும் மோசடி அழைப்புகளை ஏற்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

News October 7, 2024

மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் புகார் தெரிவிக்கலாம்

image

மழைக் காலங்களில் பெருமழை மற்றும் புயல் காற்றினால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதை மற்றும் மழை நீர் தேங்கியுள்ள இடத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதைக் கண்டால் பொதுமக்கள் உடனுக்குடன் 24 மணி நேரமும் செயல்படும் மின்துறை அலுவலக இலவச தொடர்பு எண் 9498794987 ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News October 7, 2024

ராணிப்பேட்டை:மழையால் பாதிக்கக்கூடிய 47 இடங்கள் தேர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 காலத்தில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பரவலாக பெய்ய வாய்ப்பு உள்ளதால் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அங்கு வசிக்கும் மக்களை தற்காலிகமாக பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!