India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆற்காடு தாலுகா திமிரி பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கு வட்டாட்சியர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் ஏரியிலிருந்து அதிக அளவு மண்ணை எடுத்து வீட்டு மனை அமைய உள்ள இடத்திற்கு லாரிகளில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி ஏரியில் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.எஸ்.பி மஹாலில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் கூட்டம் நாளை 30ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். எனவே செயல் வீரர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.
அரக்கோணம் பழனிபேட்டை பகுதியில் ரயில்வே இரட்டைக்கண் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இங்கு மழை நீர் மற்றும் சேறும் சகதியும் கலந்து தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சுரங்கப்பாதையை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்காளம்மன் கோயில் அருகில் செப். 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம நடைபெறும் என்று எம்எல்ஏ ரவி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காற்று 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று திருப்பதியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு சென்னைக்கு இயக்கப்படும் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் சுய தொழில் செய்வோர் தனி நபர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றங்கள் மற்றும் வங்கியில் எத்தனை பேருக்கு கடன் தரப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீசார் இணைந்து இன்று சோதனை நடத்தினர். இதில் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்
ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி , ஆற்காட்டில் ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி, அரக்கோணத்தில் மங்கம்மாபேட்டை ஏரி, மாவேரி ஏரி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும். போலீஸாருக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் விழா குழுவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஓவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1கிலோ ரூ.46 வரையிலும், தக்காளி ரூ.25 வரையிலும், கத்திரிக்காய் ரூ.36 முதல் ரூ.40 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.55 வரையிலும், இஞ்சி ரூ. 180 வரையிலும், கேரட் ரூ. 70 வரையிலும், பூண்டு ரூ.260 முதல் ரூ.280 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.