India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, மாமியார் கொள்ளாபுரி. இவர்களுக்கிடையே நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த கொள்ளாபுரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.
ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம் (IIMUN) 2024 – தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ஜிகே உலக பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித்தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை 31.08.2024 காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை மாவட்ட திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பொதுக்கூட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் செப் 2ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்புரையாற்றுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி செப்.7ஆம் தேதி கொண்டாடப்ப உள்ளது. இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வெண்பாக்கத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்விரோதத்தில் முட்டவாக்கத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் அஜித் குமார் (23) 2020ஆம் ஆண்டு வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் தபேந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துள்ளானது. லாரியை முந்தி சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் காரில் பயணித்த அருணகிரி என்பவர் மூளை சிதறி பலியானார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 334 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்திரகலா மற்றும் சோளிங்கர் எம்.எல்.ஏ.முனிரத்தனம் ஆகியோர் வழங்கினர். இந்த முகாமில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,122 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் சந்திரகலா வெளியிட்டார்.இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல், ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்ட லுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகமான தாசில்தார் மற்றும் நக–ராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.