India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உணவு பாதுகாப்புத்துறை குழுவினர் தாஜ் கேன்டீனில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உணவுப் பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. உணவுப்பொருட்கள் தயாரிக்கும் இடம் அசுத்தமாக இருந்ததால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்ததோடு காலாவதியான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், சுகாதாரமற்ற கெட்டுப்போன ஐஸ் கேக் விற்பனை செய்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.

பிரபல பேக்கரி கடையில் வாங்கிய ஐஸ் கேக் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அமீன் பீரான் தர்கா தெருவை சேர்ந்த ராஜ்குமார்(44), தனது மகளுக்காக நேற்று (மார்.5) தாஜ் கேன்டீன் என்ற கடையில் ஐஸ் கேக் வாங்கியுள்ளார். வீட்டில் அதை பிரித்து நுகர்ந்து பார்த்தபோது, அதில் துர்நாற்றம் வீசியது. பின்னர், கேக் வாங்கிய ரசீதுடன் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்.5) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 67,461 விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்ய வேண்டும். இதற்கான முகாம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை 41,915 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர், இது 62% ஆகும். மீதமுள்ள 25,546 பேர் மார்ச் 31ஆம் தேதிக்குள் எந்த வித கட்டணமும் இன்றி பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

பிளஸ் -1 அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வாலாஜா வன்னிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அறை கண்காணிப்பாளர் இடம் எந்த முறைகேடும் இல்லாமல் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்களுக்கு குடிநீர் மின்சார வசதி செய்து தர வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்துக்கு நீட் விலக்கு வேண்டியும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற வகையில் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உட்பட 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரியும் மேலும் தமிழக சுகாதாரத்துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் J.U. சந்திரகலா தலைமையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் தெரிவித்தாவது: மாவட்டத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள அரக்கோணம் சோளிங்கர் ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரங்களில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் சிசு கரு கலைப்பு தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவ்விரண்டு நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வரும் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் நடக்கும் விழாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருகிறார். எனவே, அந்த 2 நாட்கள் மாவட்ட முழுதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.