Ranipet

News October 16, 2024

ஆற்காட்டில் வேலை வாய்ப்பு முகாம்

image

ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19ம் தேதி காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் எஸ்எஸ்எல்சி,எச்எஸ்சி,ஐடிஐ,டிப்ளமோ,டிகிரி,நர்சிங்,பி.இ,எம்.பி.ஏ உள்ளிட்ட கல்வி தகுதியினை உடைய வேலை நாடுநர்கள் கலந்துகொண்டுதங்களுக்கு தேவையான வேலைகளை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்

News October 16, 2024

மாவட்ட வருவாய் ஆய்வாளர் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து அனைத்து ஊர்களிலும் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அனைத்து வருவாய் ஆய்வாளர்களும் தங்களது முகாம் அலுவலகத்தில் தங்கி இருக்க வேண்டும், அவர்களது வீடுகளுக்கு செல்லக்கூடாது, இரவு நேரத்தில் முகாம்களில் இல்லாவிடில் வருவாய் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் ஆய்வாளர் சுரேஷ் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 16, 2024

மழை காரணமாக முகாம் ரத்து: ஆட்சியர்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெற இருந்த ‘ உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ‘ முதல்வர் சிறப்பு திட்ட முகாம் ரத்து செய்யப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இந்த முகாம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்து தகவல்களை 24 மணி நேரமும் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படக்கூடிய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளவும் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் மேற்கண்ட தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளவும்.

News October 15, 2024

குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., பரிந்துரையின் பேரில் வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நெமிலியை சேர்ந்த குற்றவாளி மதன் இன்று (15.10.2024) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News October 15, 2024

ராணிப்பேட்டையில் ரயில்கள் முழுவதும் ரத்து

image

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பேசன் பிரிட்ஜ் வியாசர்பாடி இடையே தண்டவாளங்களில் அதிக அளவு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் திருப்பதி, ஈரோடு, மைசூர் ஆகிய ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

News October 15, 2024

பருவமழை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

image

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் இன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையினையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மீட்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கிரண் சுருதி ஆகியோர் இருந்தனர்.

News October 15, 2024

மின் கம்பிகள் அருந்து கிடந்தால் புகார் தெரிவிக்கலாம்

image

மழைக் காலங்களில் பெருமழை மற்றும் புயல் காற்றினால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதை மற்றும் மழை நீர் தேங்கியுள்ள இடத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதைக் கண்டால் பொதுமக்கள் உடனுக்குடன் 24 மணி நேரமும் செயல்படும் மின்துறை அலுவலக இலவச தொடர்பு எண் 9498794987 ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை பெய்யும் என்று எச்சரிக்கையை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 15, 2024

வடகிழக்கு பருவமழை: அமைச்சர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் காந்தி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!