India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் துணை கம்மாண்டர் சங்கர பாண்டியன் தலைமையில் வேதியல், உயிரியல், கதிர்வீச்சு, ரசாயனம் போன்ற அபாயம் ஏற்படும் போது அதை கையாளும் விதம் குறித்த நான்கு வார கால அடிப்படை பயிற்சி இன்று நடைபெற்றது. இதில் அரியானா, அஸ்ஸாம், உத்தர பிரதேசம் ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.
வாலாஜா தாலுகா பாகவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சுஜிதா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுஜிதா 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இன்று தம்பதிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மன உளைச்சலுக்கு ஆளான சுஜிதா வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மனுக்களாக (52 மனுக்கள்) வழங்கினர். இதில், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் வெங்கடகிருஷ்ணன், திருமால், ரமேஷ்ராஜ், ராமச்சந்திரன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பகுதிகளில் தலைமைக் கழகத்திலிருந்து பெறப்பட்ட அதிமுக புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் வருகிற 8-ஆம் தேதிக்குள் கையொப்பம் மற்றும் செல்போன் எண் தங்களிடம் உள்ள உறுப்பினர் உரிமை சீட்டு பட்டியலில் பதிவு செய்து மாவட்டக் கழக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் உத்தரவு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் பகுதியில் திமுக ஒன்றிய கழகத்தின் சார்பாக நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டுமென கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு ராணிப்பேட்டையிலிருந்து நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். அரசினர் ஆதி திராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரஜினி பிரியா, அரக்கோணம் அரசினர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் கௌரி, விஆர்வி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சதீஷ் பானர்ஜி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், மண்டல அளவில் தடகளப் போட்டிகள் வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது. விளையாட்டு போட்டியில் 11 மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் வரும் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று ராணிப்பேட்டை மாவட்டம் உடற்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூரில் திருப்பதியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்து மீது இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுமதி, சண்முகசுந்தரம், பாக்யராஜ், கிஷோர் குமார் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித்தேர்விற்கான தமிழ்த்தேர்வு (100-கேள்விகள்) 04.09.2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வாளர்கள் போட்டித்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7:55, 10:55 நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் இரவு 10:20-க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.