India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் தாலுகா கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்று சிலர் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட புதுபுங்கனூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி (வ/33) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இன்று (05.09.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை மாவட்ட எஸ்பி பாராட்டினார்.
அகில இந்திய தொழிற்தேர்வில் தனிதேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூபாய் 200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ரோட்டு தெருவை சேர்ந்த ரேவதி-கார்த்திக் தம்பதியரின் ஒன்றரை வயது பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. அப்போது வீட்டில் வைத்திருந்த பக்கெட் தண்ணீரில் தவறி விழுந்து மூச்சு திணறி மயங்கியது. வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் இன்று ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, செயற்பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சுதா மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டையைச் சோ்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் அரசின் உதவிகளை எளிய முறையில் பெற நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் சந்திரகலா தெரிவித்துள்ளாா். சுயதொழில், வேலைவாய்ப்பினை அளிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களிடம் பயிற்சி அளிக்க வேண்டும், வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.6ஆம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக கோவைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் 8ஆம் தேதி கோவையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு காலை 7.35 மணிக்கு சென்று சேருகிறது என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.6ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக கோவைக்கு இரவு 11.45 மணிக்கு சென்று சேருகிறது. மறு மார்க்கத்தில் 8ம் தேதி கோவையில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு காலை 7.35 மணிக்கு சென்று சேருகிறது என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
அரக்கோணம் பஜார் பகுதியில் உள்ள கடைகளில் இன்று நகராட்சி ஆணையாளர் ரகுராமன், சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் சுதாகர் மற்றும் தூய்மை பணியாளர் இணைந்து 20 கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ததாக மூன்று கடைகளில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூபாய் 12,000 அபராதம் விதித்தனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து அரக்கோணம் வரும் ரயிலில் 19 வயது இளம் பெண்ணிடம் 4 வாலிபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். இளம்பெண் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி விசாரணை நடத்தி, பீகாரைச் சேர்ந்த ஹக்கீம், மஜ்ருல் ஜுல்பாகர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தர்மே சர்கார் ஆகிய 4 பேரை இன்று அரக்கோணத்தில் கைது செய்தார்.
Sorry, no posts matched your criteria.