Ranipet

News September 7, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News September 7, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News September 7, 2024

ராணிப்பேட்டை அருகே தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

image

அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி (47). அவரது மகள் பவித்ரா (24), மகன் யுவனேஷ் (20) ஆகிய மூன்று பேர் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தனர். மீனாட்சியின் கணவர் விஜயன் தலைமறைவாக உள்ளார். டவுன் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள விஜயனை போலீசார் தேடி வருகின்றனர்.

News September 7, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாத வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் தொடர்ந்து ஒருங்கிணைந்த துறைகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News September 6, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை பிடிஓவாக பணியாற்றி வந்த கோபால் காவேரிப்பாக்கத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த பிஸ்மில்லா நெமிலிக்கும், வாலாஜா துணை பிடிஓ செல்வவிநாயகம் நெமிலிக்கும், அங்கு பணியாற்றி வந்த கோகிலா ஆற்காட்டுக்கும் என மொத்தம் 8 துணை பிடிஓக்களை பணியிட மாற்றம் செய்து இன்று ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

News September 6, 2024

ரோப்கார் சேவை நாளை முதல் தொடக்கம்

image

சோளிங்கர் மலையில் புகழ்பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ரோப் கார் சேவை இயங்கி வருகிறது. வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ரோப் கார் சேவை தொடங்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 22 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டும் பணி தொடக்கம்

image

அரக்கோணம் தாலுகா ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு அதிலே அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியை எம்எல்ஏ ரவி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா ராமதாஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 6, 2024

ராணிப்பேட்டையில் தொழிற் பழகுநர் மேளா

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு செப் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடத்தப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர்ந்து என்ஏசி சான்றிதழ் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

அரக்கோணம் அருகே பழிக்கு பழியாக இளைஞர் கொலை

image

அரக்கோணம் அடுத்த கிழவனத்தில் பழிக்கு பழியாக இளைஞரை தந்தை, மகன் கொலை செய்தனர். ஓராண்டுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் சந்திரன் என்பவரை கொலை செய்துள்ளார். ஜாமினில் வந்த சந்திரன் பாஸ்கரின் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மகன் எத்திராஜ் சேர்ந்து சந்திரனை வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 6, 2024

ரயில் முன் பாய்ந்து சிறுமி தற்கொலை

image

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 16 வயது சிறுமி நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். அம்மூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு திருமணத்தில் விருப்பமில்லை. இதனால் மனம் உடைந்த சிறுமி, வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். போலீசார் வ்ழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!