India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. தங்கள் கைப்பேசி மற்றவர் கையாளுவது தடுக்க சில வழிமுறைகள்.1.உங்கள் கைப்பேசியில் பலமான கடவுச்சொல்லை பயன்படுத்தவும் 2.மென்பொருள்களை புதுப்பிக்க வேண்டும்3.தேவையில்லாத வை-பை பயன்படுத்துவதை தவிர்க்கவும்4.அங்கீகரிக்கப்படாத மென்பொருள்களைத் தவிர்க்கவும்5.தேவையில்லாத இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க.
தக்காளி ரூ.40-60, குடைமிளகாய் ரூ.50, கத்திரிக்காய் ரூ. 60-70, கருணைக்கிழங்கு ரூ.50, வெண்டைக்காய் ரூ.25-30, சுரைக்காய் ரூ.15, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.50, பீன்ஸ் ரூ.70-80, வெங்காயம் ரூ.50-60, சின்ன வெங்காயம் ரூ.50-55, இஞ்சி ரூ.120-150, பூண்டு ரூ.300-350, காலிஃப்ளவர் ரூ25, வாழைத்தண்டு ரூ.10-15, கீரை வகைகள் ரூ.10-15, மாங்காய் ரூ.50-60, அவரை ரூ.70, முருங்கை ரூ.40-50 விற்பனை செய்யப்படுகின்றன.
ராணிப்பேட்டையில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், குருவராஜபேட்டை, பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட் தொழிற்சாலை பகுதிகள், திமிரி, விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையாத்தூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (21.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.
ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் (21.10.2024) இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தலைமையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 நபர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு கடைக்கும் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தாட்கோ துறையின் சார்பில் 21 தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 30 ஆயிரத்து 500 மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று, ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமை மைதானத்தில் இன்று காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று காவலர் வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இக்குறிப்பில் நம் பாதுகாப்பிற்காகவும் நம் நாட்டு பாதுகாப்பிற்காகவும் நம் உயிரையும் துச்சமாக எண்ணி பல உயிர் தியாகம் செய்த காவலர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பை பறைசாற்றும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
Sorry, no posts matched your criteria.