Ranipet

News September 12, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்தில் பெண் மரணம்

image

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வழியாக நடைமேடை எண் 3,4 ஆகியவற்றுக்கு செல்வதற்காக பயணிகள் சென்று வருகின்றனர். நேற்று அதே போன்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சரக்கு ரயில் நின்றிருந்த போது அதனை கடந்து செல்ல முயன்றார். அப்போது சரக்கு ரயிலை இயக்கிய போது உடல் துண்டாகி பெண் இறந்தார். அவர் யார் என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 12, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து கொள்ளலாம். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

5ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

image

அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரசன்னா (10). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று மாலை நாகவேடு காலனி பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றான். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற பிரசன்னா நீரில் மூழ்கி உயிரிழந்தார். தாலுகா போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

News September 11, 2024

அரக்கோணத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

அரக்கோணத்தில் டிவிஎஸ் குரூப் ஆஃப் கம்பெனி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் இணைந்து வேலை வாய்ப்பு முகாமினை செப்டம்பர் 12ஆம் தேதி கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்த உள்ளனர். இந்த முகாமில் பி.இ, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

image

வாலாஜா சேர்ந்த ஜிப்ரான் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் மின்சாரம் தாக்கியதால் அவரது வலது கை முற்றிலும் செயல் இழந்தது. இந்த செய்தியை கடந்த வாரம் நமது வே2நியூஸ்-ல் பதிவிட்டு இருந்தோம். செய்தி அறிந்த மாவட்ட நிர்வாகம், மாணவனை நேரில் அழைத்து செயற்கை கை பொருத்துவதற்கான அளவீடு செய்யும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

News September 11, 2024

இ.பி.எஸ் உடன் ராணிபேட்டை மாவட்ட செயலாளர் சந்திப்பு

image

ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார், பசுமைவழிச் சாலையில் அதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதில் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

அரக்கோணத்தில் போலீசை தாக்கிய இளைஞர் கைது

image

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் பொதுபெட்டியில் இன்று சில வாலிபர்கள் பாட்டு பாடியபடி வந்தனர் ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு பயணி ஒருவர் புகார் தெரிவித்தார், ரயில் அரக்கோணம் வந்தபோது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர்களை கீழே இறக்கினார் அப்போது அரக்கோணம் சோமசுந்தரம் நகரை சேர்ந்த பிரகாஷ் ஆர்பிஎப்காவலர் பாபன் சவுரானை கல்லால் தாக்கியும் கையில் கடித்து தப்ப முயன்ற போது கைது செய்தனர்

News September 11, 2024

மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் காலமானார்

image

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர்மன்ற தலைவர் முகமது அமீன் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார். இந்த செய்தி அறிந்த ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முகமது அமீன், 4ஆவது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2024

அரக்கோணத்தில் இன்றும் மின்சார ரயில் ரத்து

image

சென்னை கடற்கரை – விழுப்புரம் இடையே 2 நாட்கள் பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே காலை 4.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் நேற்று ரத்து செய்யப்பட்டநிலையில், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News September 11, 2024

ரயில் பயணிகள் கவனத்திற்கு; 4 பெட்டிகள் இணைப்பு

image

சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாக இயக்கப்படும் ஏற்காடு, காவேரி திருவனந்தபுரம், ஆலப்புழா, மற்றும் வாராந்திர ரயில்களான நாகர்கோவில், கரக்பூர் ,புருலியா ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் ஜனவரி முதல் 4 பொதுப் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!