Ranipet

News September 13, 2024

கார், வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

image

நெமிலி தாலுகா மேலப்புலம் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் இன்று பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த காரும், அரக்கோணம் நோக்கி வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 13, 2024

அமைச்சரை சந்தித்த வாலாஜா பொதுமக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை வாலாஜாபேட்டை ஹவுசிங் போர்டு பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது, எங்கள் பகுதியில் கால்வாய் பிரச்சினை உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் MC உடனிருந்தனர்.

News September 13, 2024

முன்னாள் படைவீரர் கவனத்திற்கு ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தால் பல்வேறு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 10 ம் வகுப்பு முடித்த அல்லது ராணுவத்தில் அதற்கு இணையான கல்வி தகுதி பெற்ற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை 15ம் தேதிக்குள் நேரில் அணுகலாம் என்று ஆட்சியர சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாதாந்திர குற்ற புலனாய்வு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று போலீசாருக்கு, போலீஸ்சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கஞ்சா உள்ளிட போதைப்பொருட்கள் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

News September 13, 2024

செப்.17 முதல் தூய்மையே சேவை பணிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தூய்மையாக பராமரிக்க தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தூய்மை பணிகள் செய்ய வேண்டும் .அப்போது அலுவலக கட்டிடங்களில் குப்பை இல்லாமல் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா அனைத்து துறை அதிகாரிகளை இன்று அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளார்.

News September 12, 2024

ராணிப்பேட்டை ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு

image

மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைக்கப்பட்ட காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு இன்று அளித்தனர். இதில், பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பின்போது விடுபட்ட மக்களை சேர்க்க வேண்டும் என்று மனு அளித்தனர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அய்யனார், மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

News September 12, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், SBI வங்கியின் பெயரில் போலியாக Reward Point-களை அனுப்பி இன்றுடன் காலாவதியாகிவிடும் என்றும், Link-யை அனுப்பி Point-களை வெல்லுங்கள் என போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது தங்களது வங்கிக் கணக்கிலுள்ள பணம் மற்றும் முழுவிவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.

News September 12, 2024

ராணிப்பேட்டை அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகிற 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்த நாளை முன்னிட்டு காலை 9 மணி அளவில் சோளிங்கரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் என்.ஜூ. பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ள நிலையில் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

News September 12, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் 10,12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஜடிஜ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

News September 12, 2024

ராணிப்பேட்டையில் அமைச்சர் அறிவிப்பு

image

மேல்விஷாரம் நகர செயலாளரும் நகராட்சி தலைவருமான முகமது அமீன் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவால் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்து கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்து, திமுக கட்சி கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் காந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!