Ranipet

News September 16, 2024

ராணிப்பேட்டை பெற்றோர்களுக்கு பரிசு: ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் Selfie with daughters என்ற நிகழ்வு நடைபெறுகிறது.பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுடன் செல்பி எடுத்த புகைப்படத்துடன் ஒரு சிறந்த வாசகத்தை எழுதி மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.சிறந்த புகைப்படம் மற்றும் வாசகங்களுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News September 16, 2024

ராணிப்பேட்டையில் ஊட்டசத்து மாதம்; ஆட்சியர் தொடங்கி வைப்பு

image

ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து உணவு கண்காட்சி அரங்கு மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று காலை 9.45 மணி அளவில் நடைபெற உள்ளது

News September 16, 2024

ராணிப்பேட்டை என்ற பெயர் உருவான வரலாறு

image

ஆற்காட்டை தலைமையிடமாக கொண்டு நவாப் சதயத் உல்லாகான் ஆட்சி புரிந்தார். 1700-ஆம் ஆண்டு செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா நவாப்களுக்கு கப்பம் கட்ட மறுத்ததால் போர் மூண்டது. இதில் தேசிங்கு ராஜா வீரமரணமடைந்தார்.தேசிங்கு ராஜா மனைவி ராணி பாய் மனைவி உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்து கொண்டார் . நவாப் இவர்களின் அஸ்தியை பாலாற்றங்கரையில் கரைத்து அங்கு நினைவிடம் எழுப்பினார். அதற்கு ராணிப்பேட்டை என்று பெயர் வைத்தார்.

News September 15, 2024

அதிமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்

image

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் கோபிநாத் அவர்கள் ஏற்பாட்டின் பேரில், ஆற்காடு மேற்கு ஒன்றியம் கீழ்மின்னல் ஊராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் விஜய் குமார் அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகி இன்று மாவட்ட கழக செயலாளர் சுகுமார் அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

News September 15, 2024

மின் வயர் உரசி கரும்பு தோட்டம் எரிந்து சேதம்

image

சோளிங்கர் தாலுகா ஜம்புகுளம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் தாழ்வான உயரத்தில் மின் வயர்கள் சென்ற நிலையில் இன்று பலமாக காற்று வீசியது. இதில் மின்வயர்கள் கரும்பு தோட்டத்தில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

News September 15, 2024

புதிய தார் சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டுக்குட்பட்ட பா.உ.சண்முகம் தெருவில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை மற்றும் புதிய மின் விளக்குகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தார் சாலை திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அரக்கோணம் நகர மன்ற உறுப்பினர் நரசிம்மன் கலந்துகொண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

News September 15, 2024

அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்

image

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் 16,18ம் தேதி மதியம் 12 முதல் 2மணி வரையிலான ரயில் சேவைகளில் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணி மற்றும் 11.45 மணிக்கு புறப்படும் ரயில் இரு நாட்களும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

News September 15, 2024

ராணிப்பேட்டையில் தேதி மாற்றம்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை கல்லூரி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் மற்றும் பொது பிரிவினர் ஆண்களுக்கான கபடி போட்டிகள் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி பாணாவரத்திற்கு மாற்றபட்டது.23-ம் தேதி நடைப்பெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் 21-ம் தேதியும் , 21-ம் தேதி நடைபெறவிருந்த கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 23-ம் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.

News September 14, 2024

164 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

image

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ராணிப்பேட்டை ஆர்.காந்தி இன்று (14.09.2024) காவேரிப்பாக்கம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 164 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.

News September 14, 2024

கபடி போட்டிகள் இடம் மற்றும் தேதி மாற்றம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கபாடி போட்டிகள் 16ம் தேதி பெல் ஆர்.சி மைதானத்திலும், பொது பிரிவினர் ஆண்களுக்கான கபாடி போட்டி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் 19ம் தேதி நடைபெற இருந்தது. இப்போட்டிகள் பாணாவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 8:30 மணியளவில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!