Ranipet

News September 19, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

image

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆற்காடு வட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 18, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் பகிரவும்.

News September 18, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 18) 100.7°F பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடந்த வாரத்தில் 95 டிகிரியாக இருந்த வெயில் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

News September 18, 2024

முதல்வரை வரவேற்பது குறித்து ஆலோசனை

image

நெமிலி மேற்கு ஒன்றியம், ரெட்டிவலம் கிராமத்தில் இன்று ராணிப்பேட்டை‌ மாவட்ட திமுக சார்பில் பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கர் பரப்பளவில் 9000 கோடி மதிப்பில் டாடா கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். முதல்வரை வரவேற்பது குறித்து மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News September 18, 2024

ராணிப்பேட்டை தனியார் தொழிற்சாலைகளுக்கு நாளை விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை செப்.19 ஆம் தேதி மின்வெட்டு காரணமாக சில தனியார் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை என்று அறிவித்திருக்கிறது. மாதந்தோறும் துணை மின் நிலையங்கள் பராமரிப்புக்கானமாக மின்வெட்டு செய்வது வழக்கம் அதன் அடிப்படையில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வெட்டு காரணமாக தோல் தொழிற்சாலை, ஷூ தொழிற்சாலை மற்றும் இரும்பு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை என்று நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

News September 18, 2024

ராணிப்பேட்டையில் மின்நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்

image

வேலூர் மின் பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த மாதத்துக்கான கூட்டம் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

News September 18, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) 100.4 °F பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடந்த வாரத்தில் 93 டிகிரியாக இருந்த வெயில் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

News September 18, 2024

எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது

image

தி.மு.க-வின் பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, கட்சி உதயமான நாள் என முப்பெரும் விழாவாக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருதினை வழங்கினார்.

News September 18, 2024

சபரிமலை சென்ற நெமிலி மாணவி உயிரிழப்பு

image

நெமிலி அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த மலையரசன் மகள் தாரணி ஸ்ரீ (10) 5ம் வகுப்பு படித்து வந்தார். தனது உறவினர்களுடன் சபரிமலைக்கு சென்றனர். கோயம்புத்தூரில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு வந்த போது திடீரென தாரணிக்கு வலிப்பு ஏற்பட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். தாரணி உடல் அசநெல்லிக்குப்பத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

News September 18, 2024

சிப்காட் மேலாண்மை இயக்குநர் நேரில் ஆய்வு

image

பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலைக்கு வரும் 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், தொழிற்சாலை அமைய உள்ள இடத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு அணுகு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணியை இன்று சென்னை சிப்காட் மேலாண்மை இயக்குநர் மற்றும் நெமிலி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!