Ranipet

News September 20, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 20, 2024

ராணிபேட்டை எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கல்

image

கலவை வட்ட ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் தலைமையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய 3 நபர்களை 17ஆம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.25 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று இதில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை அழைத்து மாவட்ட காவல் எஸ்.பி. கிரண் ஸ்ருதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

News September 20, 2024

ராணிப்பேட்டையில் படித்த இளைஞர்களை ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு திட்டத்தின் கீழ்
நடப்பாண்டு 21 நபர்களுக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் கடன் உதவிகளை வழங்க இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் தலைமுறை தொழில் முனைவோர் 16 நபர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கபட உள்ளது. இதை படித்த இளைஞர்கள் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் அழைப்பு

News September 19, 2024

அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு

image

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.8,000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

News September 19, 2024

அரக்கோணத்தில் மாவட்ட எஸ்பி ஆய்வு

image

அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரக்கோணம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பதிவேடுகளையும் மாவட்ட எஸ்பி இன்று ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

News September 19, 2024

நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் நேற்று (18.09.2024) ஆற்காடு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஆற்காடு அரசு கண் மருந்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவசங்கரி உள்ளனர்.

News September 19, 2024

10 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

image

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீசார் இணைந்து நேற்று சோதனை நடத்தியதில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை கடத்தியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 19, 2024

வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்தல் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார் இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் மேலும் தேர்தல் பிரிவு துணை ஆட்சியர் மற்றும் அந்தந்த துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.

News September 19, 2024

ராணிப்பேட்டையில் அறிவித்த மின்வெட்டு ரத்து

image

ராணிப்பேட்டையில் இன்று (19.9.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென்று அறிக்கை வெளியிட்டது அதில் 19.9.24 மின்வெட்டு என்று அறிவித்த நிலையில் துணை மின் நிலையங்களில் சில காரணங்களால் இன்று அறிவித்த மின் வெட்டு ரத்து செய்து மின்சாரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

News September 19, 2024

ராணிப்பேட்டையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 1 வரை ராணிப்பேட்டை பழைய BSNL அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதியுடைய வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஷேர் செய்யவும்

error: Content is protected !!