Ranipet

News November 5, 2024

நேரில் சென்று காரணத்தை கேட்டறிந்த ஆட்சியர்

image

விளாம்பாக்கம் பேரூராட்சியில் சின்ன உப்புப்பேட்டை சாலை அருகே பேரூராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள பகுதியில் சாலையோரம் உள்ள நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்து வரும் 10 இருளர் இன குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு குடி பெயராமல் இருந்துள்ளனர். இந்தநிலையில், அங்கு சென்ற ஆட்சியர் சந்திரகலா இடம் பெயராதது குறித்து சம்மந்த பட்டவர்களிடம் கேட்டறிந்தார்.

News November 5, 2024

பள்ளி கட்டடத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஞானசுந்தரம், பேரூராட்சி தலைவர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் அம்சா, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுனன், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News November 5, 2024

திருவண்ணாமலை ரயில் 12 பெட்டிகளாக இயக்கம்

image

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 8 பெட்டிகளாக இயக்கப்படும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்க நாளை முதல் 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோன்று 7ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு 12 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படும்.

News November 5, 2024

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

image

உங்கள் கடவுச்சொல்லை உங்கள் பல் துலக்குவது போல் கருதுங்கள். வேறு யாரும் அதைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு புதிய கடவுச்சொல்லை மாற்றுங்கள். உங்கள் கடவுச்சொல் வலுவாக இருந்தால், உங்கள் கணக்கு & கணினி ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்கப்படும். உங்கள் ஒவ்வொரு கணக்குக்கும் வலுவான கடவுச்சொல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கண்காணிப்பாளர் கிரன் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

பேக்கரி ஊழியருக்கு கத்தி குத்து; வாலிபர் கைது

image

பனப்பாக்கத்தில் உள்ள பேக்கரியில் யுவராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் ஆற்காட்டில் உள்ள வீட்டுக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கல்பலாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் முன்விரோதம் காரணமாக யுவராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் அஜித்தை தேடி வருகின்றனர். 

News November 5, 2024

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1330 திருக்குறள்களை ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு

News November 5, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு திட்டத்தின் கீழ் பெறப்பட்டு 3 மாதங்கள் முதல் 6 மாதத்துக்கு மேல் நிலுவையிலுள்ள மனுக்கள் தொடர்பாக அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும். தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்கள் பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்தான மனுவினை ஆராய்ந்து கள ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (04.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 4, 2024

போதைப்பொருள் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள், கூலிப், கஞ்சா இவைகள் நடமாட்டம் குறித்தும் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News November 4, 2024

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாவது: குழந்தைத் தொழிலாளர் வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது கனவுகளைத் தொடர உரிமை உண்டு. குழந்தைத் தொழிலாளர்களின் தடைகளை உடைத்து அவர்களுக்கு புதிய கல்வியை வழங்குவோம். நமது சிறிய அளவில் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!