India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூன், ஜூலையில் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டய தேர்வின் விடைத்தாள்களின் நகலை ஆசிரியர் பயிற்சி தேர்வாளர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவ.10 தேதி (நாளை) ராணிப்பேட்டையில் உள்ள NRK திருமண மண்டபத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக நகர ஒன்றிய பேரூர் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா காணாறு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (85) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (33) என்ற வாலிபர் கடந்த 2018-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று (நவம்பர் 9) இந்த வழக்கில் கார்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (09.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் திமிரி ஊராட்சியில் 560 வீடுகளும், வாலாஜா ஒன்றியத்தில் 667, அரக்கோணம் ஒன்றியத்தில் 625, ஆற்காடு ஒன்றியத்தில் 452, சோளிங்கர் ஒன்றியத்தில் 339, நெமிலி ஒன்றியத்தில் 502 வீடுகளும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 179 வீடுகளும் என மொத்தம் 3,333 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபேலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி கலவை ஆகிய 6 வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் இணைத்தல் ஆகியவற்றுக்கு மனு கொடுத்து உடனடி தீர்வு காணலாம் என ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரு பெண் உட்பட 2 சமூக பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்று நவ. 23ம் தேதிக்குள் சென்னை புரசைவாக்கம் குழந்தைகள் நலன் முகவரிக்கு அனுப்பலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.