India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இதன் காரணமாக ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட SP கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் சதீஷ் (40), தனபதி (55), புருஷோத் (20) ஆகிய 3 பேரும் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்ட ஆட்சியர் சந்திரகலா, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா ஆகியோ உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்பேத்கர் விருது பெற பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் உள்ளிட்டோர் இதற்கான விண்ணப்பத்தினை ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான 2024 ஆண்டிற்கான மாவட்ட அடையாள கலைத் திருவிழா போட்டிகள் ராணிப்பேட்டை வி.ஆர்.வி. பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறார் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 என்ற எண்ணில் அழைக்கலாம்.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்டத்தில் இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தவும், இந்து மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்து முன்னணியின் ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகளுக்கான பொது அறிவு மற்றும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு நேற்று வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 365 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 194 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 171 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நேற்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெருமூச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.