Ranipet

News March 31, 2024

அரக்கோணம் 108 பால்குட ஊர்வலம் பக்தர்கள்

image

அரக்கோணம் அடுத்த கைனூர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் இன்று நடந்தது. ஊர் நாட்டாண்மைதாரர் நாதமுனி, நிர்வாகிகள் ஆறுமுகம் ,மூர்த்தி, வழக்கறிஞர் தினேஷ் ,மணி, குப்புசாமி ,கோதண்டன் ,அன்பு, குப்பன் ,முரளி முனிரத்தினம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

News March 31, 2024

ராணிப்பேட்டை: புதிய நீதிமன்றம் திறப்பு விழா!

image

ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், வேலூர் பொறுப்பு நீதிபதியுமான (போர்ட்போலியோ) ஆர். சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

News March 30, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து

image

அரக்கோணம் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் சுமதி 45 இவர் கட்டிட தொழிலாளி. இன்று மதியம் சித்தேரி பஸ் ஸ்டாப் அருகில் ஓரமாக நடந்து சென்றார் அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த லாரி சுமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2024

அரக்கோணம் தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டி

image

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் ,பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சை என மொத்தம் 26 பேர் இறுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர் .வேட்பு மனு வாபஸ் தொடர்பான கடைசி நாளான இன்று மூன்று பேர் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற்று கொண்டனர். இதைத் தொடர்ந்து 26 பேர் இறுதி வேட்பாளராக உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்தார்.

News March 30, 2024

பாமக வேட்பாளர் சொத்து விவரங்கள்….

image

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே.பாலு தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளாா். இதில் தனது பெயரில் ரூ. 1 கோடி 63 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் வங்கிகளில் இருப்புத் தொகை ரூ.1.58 லட்சம், தனது மனைவி பெயரில் ரூ. 2 கோடி 12 லட்சம் 49 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும் மேலும் தனது பெயரில் ரூ. 42 லட்சம் கடன் உள்ளதாகவும் வேட்புமனு உறுதி மொழி பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

திமுக வேட்பாளர் சொத்து விவரம்……

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக ரூ.53.45 கோடியிலும், தனக்கு ரூ.649 கோடி கடன் இருப்பதாகவும், தனக்கு காா் இல்லை என்றும் தனது தேர்தல் வேட்பு மனு தாக்கல் உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா்.

News March 30, 2024

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர்

image

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் மதச் சார்பற்ற இந்திய கூட்டணி சார்பில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நேற்று இரவு உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உடன் இருந்தார்

News March 29, 2024

ராணிப்பேட்டை அருகே கொள்ளை

image

ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் .நேற்று சென்னையில் உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் கொள்ளை போனது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News March 29, 2024

அரக்கோணம் தொகுதி: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

மக்களவை தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 44 மனுக்களில், இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 10 மனுக்களும் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க..!

image

தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.