Ranipet

News April 9, 2025

ராணிப்பேட்டை: சொத்துவரி செலுத்துவோருக்கு கட்டண சலுகை 

image

ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் 2025-26ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30க்குள் செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட கால அளவில் வரி செலுத்தாத நபர்களுக்கு ஒரு சதவீத தாமத வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது முறையாக வரி செலுத்துவோருக்கு பயன் உள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்து.

News April 9, 2025

ராணிப்பேட்டை MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 9, 2025

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் 12-ந்தேதி நடைபெறுகிறது

image

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதுதவிர பொது வினியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி அன்று மது விற்பனைக்கு தடை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.10ம் தேதி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால், மதுக்கூடங்கள் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

நாவில் எச்சில் ஊற வைக்கும் ராணிப்பேட்டை மக்கன் பேடா

image

ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரம்பரியமான உணவு வகை இருக்கும். எத்தனை தலைமுறை கடந்தாலும் அந்த உணவும் அதன் ருசியும் மாறவே மாறாது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஸ்பெஷல் உணவு என்றால் அது மக்கான் பேடா தான். மக்கன் என்றால் உருது மொழியில் நயம் என்றும் பேடா என்றால் சர்க்கரை பாகில் ஊறவைக்கும் இனிப்பிற்கு பேடா என்று கூறப்படுகிறது. தந்தை பெரியார் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார். ஷேர் பண்ணுங்க மக்களே!

News April 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News April 8, 2025

மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் என்பதால் அந்நாளில் மட்டும் அரசு டாஸ்மாக் மது கடைகளை மூடி வைக்க வேண்டும். மதுக்கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்த மது கூடங்களையும் மூட வேண்டும். மீறினால் மதுக்கூடங்களின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர்

image

 மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம்.

News April 8, 2025

ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

image

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, ராணிப்பேட்டை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். ambedkarfoundation.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!