India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளி ஆகாஷ் (22) (தந்தை பெயர் ஆனந்தன்) என்பவரை இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 258 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக கந்திர்பாவை (58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலராக இருந்தார். இந்நிலையில் நேற்று(ஏப்.5) பணி நேரம் முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில், சனிக்கிழமையான இன்று(06.04.2024) மற்றும் நாளை(07.04.2024) என 2 நாட்கள் கம்பி வட ஊர்தி நிலையத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆதலால் இந்த நாட்களில் கம்பி வட ஊர்தி சேவை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே அறிவித்துள்ளது. இது மூர் மார்க்கெட்டிலிருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு அரக்கோணம் செல்லும். பின் அரக்கோணத்திலிருந்து பிற்பகல் 2.25-க்கு புறப்பட்டு மாலை 5:00-க்கு சென்னை வரும். வழித்தடம்: பேசின் பாலம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அரக்கோணம் அடுத்த திருவலங்காட்டை சேர்ந்தவர் சவுமியா(27), தனியார் கம்பெனி தொழிலாளி. இவர் வேலை நேரம் முடிந்து நேற்று(ஏப்.3) திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரும் மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது, மணவூர் அருகே இளைஞர் ஒருவர் சவுமியா அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆற்காடு நிலை கண்காணிப்பு குழு அலுவலர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் இன்று ஆற்காடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற வாலிபர் ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் பணம் இருந்தது. அப்பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அருள் செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா வளையாத்தூர் கிராமத்தில் நல்லாத்தூர் வாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று(ஏப்.3) அதிகாலை பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கோயிலுக்கு சொந்தமான 8 சவரன் நகைகள் மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.7,000 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.