India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நெமிலி தாலுகா பனப்பாக்கம் அருந்ததியர் பாளையம் புதிய தெருவை சேர்ந்தவர் எழில். இவரது மனைவி டில்லி ராணி( 23). இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று மாலை டில்லிராணி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நெமிலி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திமுக வேட்பாளா் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினா், நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமையில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் சேர்ந்த மற்றொரு பிரிவினர் 15க்கும் மேற்பட்டோர் பார்த்தசாரதி, விமல் உள்ளிட்ட பலரை உருட்டு கட்டையால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாணாவரம் அருகில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் செவ்வந்தி மற்றும் போலீசார் நேற்று(ஏப்.8) இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரித்ததில், ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரிந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சோளிங்கர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வல்லம் சோதனை சாவடியில் நேற்று(ஏப்.8) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ.74.50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியில் சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் முன்னாள் சென்ற 2 கார்கள் மீதும் லாரி மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த அவலூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலை கண்காணிப்பு குழுவினரின் ஜீப் இன்று புலிவலம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர் தேர்தல் அதிகாரி வந்த ஜீப் மீது மோதியது. இதில் டிரைவர் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள https://affidavit.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
அரக்கோணம் தொகுதியில் 15,978 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1,122 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இதேபோல் 85 வயது நிரம்பிய 14,035 மூத்த வாக்காளர்களில் 1,184 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இவா்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி நேற்று முன்தினம்(ஏப்.5) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.