Ranipet

News March 29, 2025

சனி தோஷம் நீக்கும் மங்கள ஸ்ரீ சனீஸ்வரர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து 3கி.மீ தொலைவில் மங்கம்மா பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மங்கள ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பே சனீஸ்வரர் திருகல்யாண கோலத்தில் இருப்பதுதான். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதால் விஷேஷ பூஜை நடைபெற உள்ளது. இங்கு வந்து வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2025

‘பெல்’ நிறுவனத்தில் வேலை; ரூ.84,000 சம்பளம்

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின்(BHEL)பெங்களூர் பிரிவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள்- 33, வயது வரம்பு: அதிகபட்சம் 32. கல்வி தகுதி: எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பு. திட்ட இன்ஜினியர் பதவிக்கு ரூ.84,000 சம்பளம். இந்த லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம்

News March 29, 2025

கோடை வெப்பத்தை தணிக்கும் முந்நீர்

image

கோடை காலத்தில் உடல் நீர்ச்சத்து (Dehydration) இழப்பை தவிர்க்க, மக்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெப்பம் காரணமாக உடலுக்கு திரவம் குறைவதால், பருகும் தண்ணீர் உடலை குளிர்விக்க உதவும். அதனால், தினமும் போதுமான அளவு நீர் குடிப்பதுடன், இளநீர், பனங்காய், ஆகிவற்றையும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

News March 29, 2025

 பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

image

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில்  ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

News March 29, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 28 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. கொண்டபாளையம் அவளூர் வாலாஜா திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100. 

News March 29, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 28, 2025

மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்கள் மாற்றம்

image

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த யுவராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் சி பிரிவு உதவியாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ராஜ்குமார் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டம் முழுதும் 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 28, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்கவும், வெளி மாநிலத்தவர், வெளி ஆட்கள் நெல் மூட்டைகள் கொண்டு வருவதை கண்காணித்து தடை செய்யவும் ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

அனைத்து துறை திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் காலதாமதம் நிலுவையில் உள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு அனைத்து துறைகளின் விவரங்கள் கேட்டிருந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா கலந்துகொண்டனர்.

News March 28, 2025

கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி

image

தமிழகத்தில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். குறிப்பாக மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நிலையில் இன்று (மார்ச் 28) ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் 37°C-ஐ தொட்டுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

error: Content is protected !!