India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டையில் திமுக மகளிர் மற்றும் தொண்டரணி, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைச்சர் காந்தி வழிகாட்டுதலின்படி புதிய நிர்வாகிகளுக்கு திமுக மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசுவாசம் பள்ளி நிறுவனர் கமலஹாந்தி கலந்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 22ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” பெற தகுதியுடையோர் வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். மேலும் விருதுக்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு கூட்டம் வரும் வியாழக்கிழமை (நவ. 21) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.01ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நவ.23ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் “குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து பெண்களை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற இலவச எண் 181 அழைக்கவும்” என தெரிவித்துள்ளது
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் டிசம்பா் மாதம் வருகை தர உள்ளார். ஆகவே மாவட்டத்தில் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் இதில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சோளிங்கர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வரும் நவ.20ம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். இத்திட்ட முகாமில் சோளிங்கர் வட்டத்தை சார்ந்த பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் நவம்பர் 20ம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (17.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.