Ranipet

News April 15, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர், எஸ் பி ஆய்வு

image

இன்று 15.04.2024 இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வளாகத்திற்கு ஆட்சியர் ச.வளர்மதி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினர்.

News April 15, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து

image

அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட்டில் மினி வேன் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கார் மினி வேன் மீது பின்பக்கமாக மோதியது. இந்த விபத்தில் மினிவேன் நடுரோட்டில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 15, 2024

திமுகவினர் தேர்தல் பிரச்சாரம்

image

ராணிப்பேட்டை, ஆற்காடு நகரத்தில் நேற்று இரவு அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இலவச பேருந்து, ரூ.1000 உதவி தொகை வழங்கிய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார். இதில் அமைச்சராக காந்தி ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News April 14, 2024

ராணிப்பேட்டை அருகே பூட்டை உடைத்து திருட்டு

image

கலவை தாலுகா குண்டலேரி கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குள் நேற்று நள்ளிரவில் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் ஒரு தங்க திருமாங்கல்யம் மற்றும் ஒரு கவரிங் திருமாங்கல்யம் ஒரு வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி திமிரி காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

News April 14, 2024

பிறந்தநாளை சமத்துவ நாளாக போற்றுவோம்

image

அம்பேத்கரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும்,
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கிய சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை சமத்துவ நாள் ஆக போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

News April 14, 2024

காலி குடங்களுடன் சாலை மறியல்

image

ராணிப்பேட்டை, லாலாபேட்டை ஊராட்சியில் உள்ள சில வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து இன்று காலை ராணிப்பேட்டை பொன்னை சாலையில் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு சென்று சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

News April 14, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. இதை ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் SP கிரண் ஸ்ருதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தனது வாக்கினை பதிவு செய்தார்.

News April 13, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. இதை ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் SP கிரண் ஸ்ருதி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தனது வாக்கினை பதிவு செய்தார்.

News April 13, 2024

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

image

ஆற்காடு – கண்ணமங்கலம் சாலை இந்திராநகர் புத்துக்கோயில் அருகே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் ஈடுபட்ட நாகராஜ் (28), கோவிந்தராஜ்(22) ஆகியோரை ஆற்காடு காவல் வட்ட ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி மற்றும் அமரேசன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

News April 13, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு எஸ்பி அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டி ஏப்ரல் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் காவல்துறை தீயணைப்பு துறை, வனத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம். தேர்தல் பணிக்கு வர விரும்புவோர் 9363868465 தொடர்பு கொள்ளலாம் என எஸ்பி கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.