Ranipet

News November 22, 2024

ஆட்சியர் தலைமையில் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம்

image

திமிரி அடுத்த நம்பரை கிராமத்தில் தனிநபர் ஒருவர் கல்குவாரி ஏலம் எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறையினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

News November 22, 2024

ராணிப்பேட்டையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்டம் TETOJAC கூட்டமைப்பு சார்பில், தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.11.2024) மாலை 5 மணி அளவில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ளதாக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம் 

image

ராணிப்பேட்டை மாவட்டம் இன்று  எண் 9 ,மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகம் , தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு, ஐடிஐ போன்ற அனைவரும் உரிய ஆவணத்துடன் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News November 22, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து; 22 பேர் படுகாயம்

image

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள்,ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பெருமாள் கோயிலில் சடங்கு ஒன்று செய்வதற்காக மினி வேனில் நேற்று வந்து கொண்டிருந்தனர்.ஆற்காடு வளவனூர் அருகில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

News November 21, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 21, 2024

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடையில் காலியாக உள்ள 32 விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நவ.28ஆம் தேதி முதல் டிச.4 ஆம் தேதி வரை வாலாஜா டோல்கேட் அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை www.drbrpt.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 21, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

ராணிப்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில், இன்றைய (21/11/24) காய்கறிகள் விலை நிலவரம், தக்காளி ஒரு கிலோ ரூபாய் 37-35, கத்தரிக்காய் ரூ.55-50, வெண்டைக்காய் ரூ.30, வெங்காயம் ரூ.60-50, உருளைக்கிழங்கு ரூ.55-48, கேரட் ரூ.80-70, பீட்ரூட் ரூ.65-55, முட்டைக்கோஸ் ரூ.40, காலிபிளவர் ரூ.40-20 என‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News November 21, 2024

ராணிப்பேட்டை அருகே கட்டண அறிவிப்பு பலகை வைப்பு 

image

சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு அதிக அளவில் சுங்கவரி வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடா்ந்து, சோளிங்கா் நகராட்சி ஆணையா் ஹேமலதா சுங்கவரி வசூல் கட்டணம் குறித்த விவர அறிவிப்பு பலகையை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதன் பேரில் நிா்ணயிக்கப்பட்ட சுங்கவரி குறித்த அறிவிப்பு பலகையை சோளிங்கா் நகராட்சி நிா்வாகத்தினா் கோயில் பகுதிகளில் நேற்று வைத்தனா்.

News November 20, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 20, 2024

ராணிப்பேட்டை எஸ்பி பாராட்டு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தீபிகா (வ/24) என்பவருக்கு 28 ஆண்டுகள் சிறைதண்டனை, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டுகளை தெரிவித்தார்.

error: Content is protected !!