Ranipet

News April 22, 2024

ராணிப்பேட்டை: பைக்கில் சென்ற பெண் பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மீனா(45). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று உறவினர்களுடன் பைக்கில் செல்லும்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் மீனா தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.21) உயிரிழந்துள்ளார்.

News April 21, 2024

சோளிங்கர் கோவிலில் தேரோட்டம்

image

சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு மகா தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News April 20, 2024

ராணிப்பேட்டை: 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

image

வாலாஜா தாலுகா அம்மூர் அடுத்த ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (28). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ராணிப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக சசிகலா இறந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News April 19, 2024

அமைச்சர் மகன் கார் கண்ணாடி உடைப்பு

image

அரக்கோணம் அடுத்த சித்தேரியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.அங்கு பாமகவினர் கட்சி துண்டு அணிந்திருந்தனர் .இது தொடர்பாக திமுக பாமக இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வினோத் காந்தியின் கார் கண்ணாடி இன்று உடைக்கப்பட்டது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடில் சாலை மறியல் செய்வோம் என்று திமுக நகர அவை தலைவர் துரை சீனி வாசன் தாலுகா போலீசாரிடம் தெரிவித்தார்.

News April 19, 2024

வாக்கு செலுத்திய ராணிப்பேட்டை கலெக்டர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வளர்மதி ராணிப்பேட்டை காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு செய்துள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்; 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

News April 19, 2024

பதற்றம் அடைய வேண்டாம் – ராணிப்பேட்டை கலெக்டர்

image

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் பதற்றமின்றி பணியாற்ற வேண்டும்; அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது; வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் சிறு சிறு கோளாறுகள், பிரச்னைகள் இருந்தால் அச்சம் அடைய வேண்டாம்; உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர் குழு மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: பெண் பலி

image

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (எ)காளியம்மாள்( 35) இவர் இன்று அல்லியப்பன் தாங்கல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். நாகாலம்மன் நகர் அருகில் வரும்போது நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி லட்சுமி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News April 18, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <>லிங்-ஐ<<>> க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

பாதுகாப்பு பணியில் காவலர்கள்

image

நாளை அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பணியில் மாவட்ட SP கிரண் ஸ்ருதி தலைமையில் 3 கூடுதல் SP மேற்பார்வையில், 6 துணை SP, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட 986 காவல்துறையினரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 282 TSP காவலர்களும், 413 ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 18, 2024

உங்கள் பெயர் இருக்கா? இல்லையா?

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!