India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் பணிகள் மற்றும் இதரப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் தருவதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டு அறிந்தார். இதில் பலர் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுத்திருந்தனர். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் உடன் இருந்தார்.
சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பெரியார் விருது பெற தேதி டிச.20 ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (24.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (24-11-2024) மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், குடும்ப வன்முறை எதிர்கொண்டால் ஆலோசனை பெற உதவி எண் வெளியிடப்பட்டது. இதில் “நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரோ குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற 181 என்ற உதவி எண்ணை அழைக்கவும்” என வாசகம் வெளியிடப்பட்டது.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி ஆலயத்தில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று புகழ்பெற்ற காமெடி நடிகர் யோகி பாபு ரோப்காரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயிலின் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளில் குறைந்த தேர்ச்சி சதவீதத்தை கொடுத்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Sorry, no posts matched your criteria.