India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக செயலாளர் W.G.மோகன் மற்றும் பெல்லியப்பா நகரில், ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர், மோர், தண்ணீர் பந்தலை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் நேற்று(ஏப்.26) திறந்து வைத்தார்.
மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை முழுவதும் 1.54 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி இன்று(ஏப்.26) தெரிவித்துள்ளார். செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் பரவுவதை தடுக்க வரும் 29ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாவட்டம் முழுவதும் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 4 மாதத்திற்கு குறைவான குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.
நெமிலி தாலுகா பன்னியூர் கிராமத்தை சேர்ந்த ஜலகண்டன், சதீஷ்குமார், உதயகுமார் ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் நேற்று(ஏப்.25) இரவு வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பன்னீர் கூட்ரோடு அருகில் செல்லும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோளிங்கர் தாலுகா போளிப்பாக்கம் கிராமம் அருகே பாணாவரம் காப்பு காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று இன்று காலை ஊருக்குள் ஓடி வந்தது. பொதுமக்கள் புள்ளிமானை பாதுகாப்பாக பிடித்து கட்டிவைத்தனர் . பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புள்ளி மானை மீண்டும் பாணாவரம் காப்புக்காட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு, அரக்கோணம் நோக்கி இன்று(ஏப்.26) காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பரமேஸ்வர மங்கலம் அருகே வரும்போது நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த காரும் லாரியின் பின்பக்கம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் லேசான காயமடைந்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் தயாளன்( 46 ).இவர் இன்று சென்னசமுத்திரத்தில் உள்ள தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அருகில் உள்ள குளத்தில் விழுந்து இறந்தார் . இதுகுறித்து வாலாஜா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு தயாளனின் உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு திலீபன் ,தேவிகா என 2 குழந்தைகள் உள்ளனர்.
அரக்கோணம் அருகே மகேந்திரவாடியில் அமைந்துள்ளது மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரைக்கோவில். இது தமிழகத்தில் உள்ள குடைவரைகளில் மிகவும் பழமையானது. கிபி. 600 – 630ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்டது. மகேந்திர பல்லவன் என்ற பெயரும் இதில் பொரிக்கப்பட்டுள்ளது. சிறிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரு முழு தூண்களும், இரு அரை தூண்களும் உள்ளன.
ராணிபேட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் ராணிபேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராணிபேட்டை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு தற்போது நிலவும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கோடைகாலத்தில் குறைவான நீர் பயன்படுத்தும் நெல்லுக்கு மாற்று பயிரான கம்பு, சோளம், ராகி, எள், பச்சைப்பயறு, காராமணி உள்ளிட்ட பயிர் வகைகளை பயிர் செய்து பயனடையுமாறு ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.