Ranipet

News October 21, 2024

காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு.

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று காவலர் வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இக்குறிப்பில் நம் பாதுகாப்பிற்காகவும் நம் நாட்டு பாதுகாப்பிற்காகவும் நம் உயிரையும் துச்சமாக எண்ணி பல உயிர் தியாகம் செய்த காவலர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பை பறைசாற்றும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

News October 21, 2024

ராணிபேட்டையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News October 21, 2024

நல வாரியத்தில் இணைய முகாம் – ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை பெற ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீர் மரபினர் நலவாரியத்தில் தங்களை இணைத்துக் கொள்ள சிறப்பு முகாம் வருகின்ற 24ஆம் தேதி காலை 11 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 20, 2024

உதவித்தொகை போலி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், கல்வி உதவித்தொகை வழங்குவதாக பெயர் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நம்பி பொதுமக்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டாம். தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். மேலும் டெபிட் கார்டு மற்றும் UPI பின் விவரங்களைப் பகிர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் நிதி சார்ந்த சைபர் குற்றங்கள் நடந்தால் 1930 எண்ணை அழைக்கவும்.

News October 20, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (20.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு,சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் :9884098100 அழைக்கலாம்.

News October 20, 2024

ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

image

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை நாவல் போரில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

News October 20, 2024

ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 20, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டையில் நாளை கலை பண்பாடு துறை சார்பில் குரல் இசை பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (அக் 20) நாளை காலை 9 மணி முதல் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 04427269148/951152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 எண்ணிற்கு அழைக்கலாம்.

News October 19, 2024

இரவு 7 மணி வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

error: Content is protected !!