Ranipet

News November 29, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடைய கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

ராணிப்பேட்டையில் குரூப் 2 மாதிரி தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A முதன்மை தேர்விற்கான (MAIN EXAM) மாதிரி தேர்வு நாளை (நவ.30) காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 29, 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (29-11-2024) மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது உங்கள் உயிரை பறிக்க விடாதீர்கள்” என வாசகம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு வெளியிடப்பட்டது. மேலும் டிரைவ் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவிக்கப்பட்டது.

News November 29, 2024

ராணிப்பேட்டையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்வழி, வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

News November 29, 2024

உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவது குறித்த விழிப்புணர் முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவது குறித்த விழிப்புணர் முகாம் நாளை (நவ.30) காலை 10.30மணிக்கு வானாப்பாடி, லாலாப்பேட்டை ரோட்டில் அமைந்துள்ள அன்னை தொழில் வளாகத்தில் நடைபெறும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார் மேலும், விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை நேரில் அனுகலாம் என தெரிவித்துள்ளார்

News November 29, 2024

கனமழை: மின்வாரியம் அறிவுறுத்தும் அட்வைஸ்

image

*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

ராணிப்பேட்டையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 28, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 28, 2024

ரோப் கார் சேவை நான்கு மணி நேரம் நிறுத்தம்

image

சோளிங்கர் கொண்டபாளையத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாதம் யோக நரசிம்மர் கண் திறந்த நிலையில் இருப்பார் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவர். அதேபோன்று இந்த ஆண்டும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் இன்று சோளிங்கர் பகுதியில் பலத்த காற்று வீசிய நிலையில் ரோப் கார் சேவை திடீரென 4 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.

News November 28, 2024

ராணிப்பேட்டையில் மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும். இதன் காரணமாக, நாளை ராணிப்பேட்டையில் ஓரிரு இடங்களில் கனமழையும், வரும் 30ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!