India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
தக்காளி ரூ.50-70, குடைமிளகாய் ரூ 50, கத்திரிக்காய் ரூ 70-80 கருணைக்கிழங்கு ரூ 60, வெண்டைக்காய் ரூ 40, நூக்கல் ரூ 60,உருளைக்கிழங்கு ரூ 40, கேரட் ரூ 50,பீன்ஸ் ரூ100-120 வெங்காயம் ரூ 40-70,சின்ன வெங்காயம் ரூ 50-55, இஞ்சி ரூ80-100, பூண்டு ரூ 250-300 காலிஃப்ளவர் ரூ 25 வாழைத்தண்டு ரூ10-15 கீரை வகைகள் ரூ 10-15 மாங்காய் ரூ 50-60 அவரை 70ரூ ,முருங்கை ரூ 40-50 விற்பனை செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தக்காளி ரூ.30-55, குடைமிளகாய் ரூ45-50,கத்திரிக்காய் ரூ65-80 கருணைக்கிழங்கு ரூ 60-65 வெண்டைக்காய் ரூ 30-40 சுரைக்காய் ரூ 15 உருளைக்கிழங்கு ரூ 40, கேரட் ரூ 60,பீன்ஸ் ரூ 80-100,வெங்காயம் ரூ 40-60, சின்ன வெங்காயம் ரூ 50-60 இஞ்சி ரூ120-150, பூண்டு ரூ 300-350,காலிஃப்ளவர் ரூ 30 வாழைத்தண்டு ரூ 10-15 கீரை வகைகள் ரூ 10-15 மாங்காய் ரூ 45-50 அவரை ரூ 80-90,முருங்கை ரூ 40-45 விற்பனை செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அன்பரசன் திமிரி கி.ஊ. பிடிஓவாகவும், அங்கு பணியாற்றி வந்த சிவப்பிரகாசம் காவேரிப்பாக்கம் கி.ஊ. பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சோளிங்கர் துணை பிடிஓ பாபு அதே அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று கி.ஊ. பிடிஓவாக மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (22.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், நேர்முக உதவியாளர் இருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்பட உள்ளது. விருதுகளை பெற்றிட விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் அக். 28-ம் தேதி பிற்பகல் 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் 2 நகல்களை ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலரிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியர் சந்திரகலா கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் INS ராஜாளி கப்பற்படை விமானத் தளத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுப்புற சூழல் பாதிப்பை தவிர்த்து கப்பற்படை விமான தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் சுற்றுச்சூழல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, INS ராஜாளி ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.