India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் இன்று வருகை தந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி வழியாக வந்த அவரை பார்த்து திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கையசைத்தனர். பதிலுக்கு மு.க ஸ்டாலினும் கையை அசைத்தபடி சென்றார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாலாஜாபேட்டையில் அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வீடியோ கேமராக்கள் முறையாக இயங்குவதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் (Strong Room) பாதுகாப்பையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ச.வளர்மதி இன்று (மே.08) பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை தருகிறார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று தெரிவித்துள்ளார். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் ட்ரோன்கள் பறக்க கூடாது. மீறி பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். சென்னையில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோயம்புத்தூரில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று இரவு பைக்கில் நந்தகுமார் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். வாலாஜா தாலுகா கீழ்விசாரம் அருகில் இன்று செல்லும் போது லாரி, நந்தகுமார் மீது மோதியது. இதில் அவர் பலியானார்.
ராணிப்பேட்டை, கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவர் தனது வீட்டின் முன்பு இருந்த இரும்பு குழாயில் நேற்று மாலை கயிறு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீராமின் கழுத்து சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாலாஜா கிரிக்கெட் அகாடமி நடத்தும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஸ் டிராபி 2024 கிரிக்கெட் போட்டி வாலாஜா ஆண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று(மே 8) நடைபெற்றது. இதில் அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.10,000 பரிசு வழங்கி போட்டியை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கழக துணைச் செயலாளர் வேதகிரி, முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வேலம் என்னும் ஊர் உள்ளது. அதன் அருகிலுள்ள அம்மூர் வனப்பகுதியில் கயிலை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கயிலை நீர்வீழ்ச்சியில் மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் இருக்கும். இது அழகிய காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் இயற்கையோடு நேரத்தை செலவிட உகந்த இடமாகும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(மே 08) மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது சற்றே நிம்மதியை தந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலை மற்றும் தரை நிலை நீர் தேக்க தொட்டிகளை டேங்க் ஆபரேட்டர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், குடிநீர் தொட்டிகள் சுத்தமாக இருப்பதை ஊராட்சி செயலாளர்கள், செயல் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று(மே 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிளஸ்-2 முடித்த மாணவ மாணவியர், உயர்கல்வியை எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்பது குறித்து விளக்கும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.