India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100
விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு 50% மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். ST & ST பிரிவை சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மானியம் பெற https://mis.aed.tn.gov.in/ இணையத்தள பக்கத்தில் விவசாயிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என செந்தில்குமார்(வே.உ.பொ.)நெமிலி தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் என அரசால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பக் கூடிய பட்டாசுகள் வெடிப்பதையும், மருத்துவமனை, முதியோர் இல்லம் அருகே பட்டாசுகளை வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். அதன் படி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்கள் 5,08,859, பெண்கள் 5,38,376 மூன்றாம் பாலினத்தவர்கள் 104 என்று மொத்தம் 10,47,339 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், அரக்கோணம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (29.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100
இராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூரில் நடைபெறும் கட்சி சார்ந்த அனைத்து கூட்டங்கள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் சென்றடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்
இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளி முன்னிட்டு பண்டிகை காலங்களில் தேவையில்லாத கவர்ச்சிகரமான விளம்பரங்களில் உங்களுக்கு பரிசுகள் விழுந்து விட்டது என்று தேவையில்லாத லிங்குகள் மூலம் உங்களை தொடர்பு கொள்ளவும் என்றும் போலியான தகவல்கள் பரப்புவார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் 2025 வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (அக்டோபர் 29) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வெளியிட உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.