India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் “அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் அங்கீகரிக்கப்படாத போலியான டிரேடிங் செயலியின் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நவ 7ஆம் தேதி மற்றும் நேரு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி 8ஆம் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு விதிமுறைகளின் படி பங்கேற்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் விவசாயிகளுக்கு கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உதவி பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (01.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது?
பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ராணிப்பேட்டையில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட ராணிப்பேட்டை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.
Sorry, no posts matched your criteria.