Ranipet

News May 14, 2024

ராணிப்பேட்டை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 23ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 84.97% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.49 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.58 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT:ராணிப்பேட்டை 87.86% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 83.39% பேரும், மாணவியர் 91.84% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 87.86% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 30வது இடத்தை பிடித்துள்ளது.

News May 14, 2024

நடந்து சென்றவர் மீது மோதிய பைக்

image

சோளிங்கர், மேல் வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மன். இவர் நேற்று இரவு பாணாவரம் – காவேரிப்பாக்கம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News May 14, 2024

மிதிவண்டிகளை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்

image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நேற்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர். 

News May 13, 2024

மிதிவண்டிகளை வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்

image

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வளர்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதிஷ் (488/500) மற்றும் அம்மனூரில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் முதல் இடத்தை பிடித்த மாணவ மாணவிக்கு இன்று அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சுகந்தி வினோதினி மிதிவண்டிகளை வழங்கினர். 

News May 13, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் ( இரவு 7 மணி வரை ) ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

ராணிப்பேட்டை போலீசாருக்கு பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 3 குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது .அது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சப் இன்ஸ்பெக்டர் மனோகரன், மோகன்ராஜ் ஆகியோர் போலீசாருக்கு இன்று பயிற்சி அளித்தனர். மாவட்ட முழுவதும் உள்ள எல்லா போலீசாருக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

News May 13, 2024

உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஆய்வு 

image

வாலாஜா, அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி , திட்ட இயக்குனர் லோகநாயகி, முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

News May 13, 2024

மாணவியை பாராட்டிய அமைச்சர்

image

ராணிப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அபிநயா என்ற மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.கே.சுந்தர மூர்த்தி மற்றும் கழகத்தினர் உடன் இருந்தனர்.

News May 13, 2024

ஆற்காடு அருகே கரும்பு தோட்டத்தில் தீ 

image

ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ஜூம்சங்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இன்று சுமார் பகல் 12 மணிக்கு மேல் கரும்புத் தோட்டத்திற்கு மேல் மின்சார ஒயரிலிருந்து தீப்பொறி பட்டு கரும்பு தோட்டம் முழுவதும் எறிந்தன. சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.