India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 8 பெட்டிகளாக இயக்கப்படும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்க நாளை முதல் 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோன்று 7ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு 12 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்படும்.
உங்கள் கடவுச்சொல்லை உங்கள் பல் துலக்குவது போல் கருதுங்கள். வேறு யாரும் அதைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு புதிய கடவுச்சொல்லை மாற்றுங்கள். உங்கள் கடவுச்சொல் வலுவாக இருந்தால், உங்கள் கணக்கு & கணினி ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்கப்படும். உங்கள் ஒவ்வொரு கணக்குக்கும் வலுவான கடவுச்சொல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என கண்காணிப்பாளர் கிரன் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
பனப்பாக்கத்தில் உள்ள பேக்கரியில் யுவராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் ஆற்காட்டில் உள்ள வீட்டுக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கல்பலாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் முன்விரோதம் காரணமாக யுவராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் அஜித்தை தேடி வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1330 திருக்குறள்களை ஒப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு திட்டத்தின் கீழ் பெறப்பட்டு 3 மாதங்கள் முதல் 6 மாதத்துக்கு மேல் நிலுவையிலுள்ள மனுக்கள் தொடர்பாக அலுவலர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும். தொடர்ந்து அனைத்துத் துறை அலுவலர்கள் பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்தான மனுவினை ஆராய்ந்து கள ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (04.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள், கூலிப், கஞ்சா இவைகள் நடமாட்டம் குறித்தும் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாவது: குழந்தைத் தொழிலாளர் வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது கனவுகளைத் தொடர உரிமை உண்டு. குழந்தைத் தொழிலாளர்களின் தடைகளை உடைத்து அவர்களுக்கு புதிய கல்வியை வழங்குவோம். நமது சிறிய அளவில் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை அம்மூர் அருகே வேலம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சேதமடைந்த பயிர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக வந்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன், வங்கிக் கடனும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோராக மாறுவதற்கும், விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்குவிப்பதற்கும், விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் இந்த மானியம் வழங்கப்படுவதாக நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.