India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை, நெமிலி பகுதியில் அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் ஏரி. இது, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி ஆகும். 3968 ஏக்கர் பரப்பளவும், 1,474 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த ஏரி பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனால் வெட்டப்பட்டது. இந்த ஏரி பாலாற்றில் இருந்து அமைக்கபட்ட வாய்கால் வழியாக நீரைப் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து 14 கிராமங்களின் 6278 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 997 போ் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 997 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் தணிகைபோளூர் வரும் போது அவ்வழியாக வந்த பைக் மீது நேற்று இரவு மோதியது. இவ்விபத்தில் தணிகைபோளூரை சேர்ந்த கிஷோர் குமார், ரஞ்சித் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 09.06.2024 அன்று நடைபெறவுள்ள குருப்4 எழுத்துத் தேர்விற்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிப்காட் பகுதியில் 6 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று(மே 16) அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது வேலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் பயணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(37), ஒடிசாவை சேர்ந்த அர்ஜுன் மாலிக்(24) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பழைமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு(மே 16) நாக வாகன உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பார்வதி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் சிவ வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார் இன்று வெங்கடேசபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அரக்கோணம் பழனி பேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரிடம் விசாரணை செய்ததில் 337 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்து கைது செய்தனர். இவற்றின் மதிப்பு ரூபாய் மூன்று லட்சம்.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வாலாஜா தாலுகா காட்டேரி கிராமம் அருகே இன்று வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளது. இதில் 15 பேருக்கு லேசான காயமும், மூன்று பேர் படுகாயமும் அடைந்தனர். 18 பேரையும் போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரக்கோணம் அரசு ஐடிஐயில் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி கட்டணம் இல்லை. 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜுன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலம். கூடுதல் விவரங்களுக்கு 04177232616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.