Ranipet

News December 15, 2024

பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை 4 நாட்கள் நிறுத்தம்

image

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி மலைக்கோவிலுக்கு சில மாதங்களுக்கு முன் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதனால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.16 முதல் டிச.19 வரை 4 நாட்கள் “கம்பி வட ஊர்தி (Rope Car) சேவை” இல்லை என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News December 15, 2024

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமுதாய நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான, ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை இன்றுக்குள் , https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்  

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 லட்சத்து 3 ஆயிரம் கால்நடைகளுக்கு நாளை டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அனைத்து கிராம ஊராட்சிகள் ,பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் போடப்படுகிறது. இந்த முகாமை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 14 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் அவசர தேவைக்கு இந்த எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும், 9884098100 – இந்த எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

ராணிப்பேட்டையில் வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் 

image

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அரக்கோணம் தெற்கு பிர்காவுக்கும், அரக்கோணம் தெற்கு வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன் வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் மாற்றம் செய்துள்ளார். இதேபோன்று மாவட்ட முழுவதும் 37 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளார்.

News December 14, 2024

ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த ராணிப்பேட்டை அமைச்சர்

image

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர் காந்தி இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணை அமைச்சரும்,ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான E.V.K.S.இளங்கோவன் இன்று இயற்கை எய்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

News December 14, 2024

கலைஞர் கைவினை திட்டம் விண்ணப்பம் அறிவிப்பு

image

கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூ.50,000 மானியம் 5 சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

News December 14, 2024

அரக்கோணம் அருகே ரப்பர் படகு மூலம் 4 பேர் மீட்பு

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் நேற்று அங்கு சென்று இரு ஆண்கள் , இரண்டு பெண்களை மற்றும் 12 ஆடுகள், 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

News December 13, 2024

சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

image

காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலக பதிவறை, கம்ப்யூட்டர் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23,500 மற்றும் 4 புரோக்கர்களிடமிருந்து 22,500 என மொத்தம் 46 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

News December 13, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூம் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

error: Content is protected !!