India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. வளர்மதி நேற்று (21.05.2024) அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் அன்வர்திகான்பேட்டை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் எலுப்பசெட்டி குளம் தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் மற்றும்
அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு நேற்று இரவு ஒருவர் தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணை வைத்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்ததில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கேசவன் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கேசவன் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர் என்பது தெரிந்தது.
சோளிங்கர் தாலுகா போளிபாக்கத்தில் , தாளிக்கால் கிராமத்தைச் சேர்ந்த தேவகி 58 என்பவர் விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். இன்று பகலில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தேவகி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை சோளிங்கர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சௌந்தரராஜன், ரவிச்சந்திரன் ரவிக்குமார் உடன் இருந்தனர்.
அரக்கோணம் அடுத்த சித்தேரி பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் நான்கு பேர் கடைகள் கட்டி உள்ளனர். இந்த கடைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தாசில்தார் செல்வி டிஎஸ்பி வெங்கடேசன் போலீசார் அங்கு வந்த நிலையில் கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சித்தேரி ஊராட்சிமன்ற தலைவர் கலைஞ்செழியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் TNPSC GROUP 1 போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு துவக்க விழா நாளை (22.05.2024) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 04172 – 291400/ 9499055897 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளின் நிலுவை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள திட்ட பணிகள் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கலவை புத்தூர் கிராமத்தில் சிதம்பரேஸ்வரர் கோயிலில் இன்று வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சொற்பொழிவாளர் அருணாசலம் சாமிகள் தலைமையில் சிதம்பரேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பால் தயிர் சந்தன மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை கலந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்து மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ஆய்வு செய்தது குறித்து அங்குள்ள பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.
ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சக்கரமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை டவுன் இன்ஸ்பெக்டர் சசிகுமார் கைது செய்தார். இந்நிலையில் நாகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி கிரண்ஸ்ருதி ஆட்சியர் வளர்மதிக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் உத்தரவின் பேரில் வாகன திருட்டில் ஈடுபட்ட நாகராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.