Ranipet

News November 4, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (04.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 4, 2024

போதைப்பொருள் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் போதைப் பொருள்கள், கூலிப், கஞ்சா இவைகள் நடமாட்டம் குறித்தும் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

News November 4, 2024

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளதாவது: குழந்தைத் தொழிலாளர் வேண்டாம் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது கனவுகளைத் தொடர உரிமை உண்டு. குழந்தைத் தொழிலாளர்களின் தடைகளை உடைத்து அவர்களுக்கு புதிய கல்வியை வழங்குவோம். நமது சிறிய அளவில் அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

image

ராணிப்பேட்டை அம்மூர் அருகே வேலம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிரை பயிரிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வந்த தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சேதமடைந்த பயிர்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக வந்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 4, 2024

படித்த பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் மானியம்

image

பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன், வங்கிக் கடனும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோராக மாறுவதற்கும், விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்குவிப்பதற்கும், விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் இந்த மானியம் வழங்கப்படுவதாக நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தெரிவித்துள்ளார்.

News November 4, 2024

ராணிப்பேட்டையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 4, 2024

மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் தகவல் 

image

வடகிழக்குப் பருவமழையால் மாவட்டத்தில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகள் தங்களது கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது உதவி வேளாண் அலுவலரிடமோ தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு சேத விவரங்கள் குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர்(பொ) செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (03.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News November 3, 2024

தண்டவாளத்தில் தலை வைத்து ஒருவர் தற்கொலை

image

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருந்ததி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (25). இவருக்கு திருமணமாகி கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக இன்று மாலை தணிகை போளூர் ரயில்வே கேட் அருகில் சரக்கு ரயில் செல்லும் போது தண்டவாளத்தில் தலை வைத்து வினோத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 3, 2024

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 2வது பெரிய காரணம் தவறாக வாகனம் ஓட்டுவது. விதிகளை மீறியதால்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்துள்ளார்.