India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
(12.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் திருச்சி மற்றும் மதுரையில் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டு பின் அனுப்பப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேரடியாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
பாம்பன் செங்குத்து புதிய பாலத்தின் மையப்பகுதியை இன்று மதியம் இயக்கி பார்த்த பின் தண்டவாளம் பிரிவு மீண்டும் இணைய வில்லை. இதனால் ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில், ராமேஸ்வரம் – தாம்பரம் அதிவிரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை போர்ட் மெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
இராமநாதபுரம் – 04567 230101
ஏர்வாடி – 04576 263266
கமுதி – 04576 223207
மண்டபம் – 04573 241544
முதுகுளத்தூர் – 04576 222210
பரமக்குடி – 04564 230290
ராமேஸ்வரம் – 04573 221273
சாயல்குடி – 04576 04576
ராமநாதபுரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று முத்துப்பேட்டை பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்திமலர் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் நாகநாதன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ மாணவியர் கல்வி செயல்பாடு, விடுதி வசதி, சுகாதார வசதி குறித்து விவாதிக்கப்பட்டது.
காவேரி கூட்டுக்குடி நீர் திட்டத்தில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள், கூட்டுக்குடி நீர் திட்ட பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய 2 நாட்கள் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.